ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் சர்வதேச முதியோர் வாரத்தினை முன்னிட்டு விழாவும், வேர்கள் சஞ்சிகை வெளியீடும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதே செயலாளர் வீ.தவராஜா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்களான எம்.ரி.எம்.றிஸ்வி (மஜீதி), சந்துரு மரியதாஸ், செயலக கணக்காளர் எம்.ஐ.எஸ்.அஹமட் சஜ்ஜாத், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ்;, சமூக சேவை உத்தியோகர்கள் எஸ்.ஜெயசேகர், செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.எம்.எச்.சபூஸ் பேகம், செயலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வேர்கள் சஞ்சிகையின் முதல் பிரதியினை ஓட்டமாவடி பிரதே செயலாளர் வீ.தவராஜாவினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், சர்வதேச சிறுவர் தினம் மற்றும் சர்வதேச முதியோர் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment