சௌபாக்கிய உற்பத்தி கிராமம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சேதனை பசளை உற்பத்தி செயற்திட்டத்தை மேற்கொள்வதற்காக பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் இன்று (11.12.2021) கொட்டகலையில் ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விவசாய உபகரணங்களை வழங்கி வைத்தார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் சௌபாக்கியா வாரம் இடம்பெற்று வருகின்றது. குறித்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி ராஜாங்க அமைச்சினால் சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவில் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 48 பயனாளிகளுக்கு இவ்வாறு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், நுவரெலியா பிரதேச செயலகத்தின் அதிகாரிகள், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment