தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் இன்று (23) மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சேதன பசளை தயாரிப்பு நிலையத்தையும் ஆளுநர் திறந்து வைத்துள்ளார்.
தலவாக்கலை நகரம் மற்றும் திம்புளை பகுதியை மையப்படுத்தி புதிய உப பிரதேச செயலகம் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் நுவரெலியா பிரதேச செயலலாளர் காரியாலயத்தோடு இணைந்தவாறு பிரதேச செயலகம் காணப்பட்டது.
இதேவேளை, தலவாக்கலை – லிந்துலை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை பயன்படுத்தி சேதன பசளை தயாரிப்பு நிலையமும் மத்திய மாகாண ஆளுநரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன், தலவாக்கலை – லிந்துல பிரதேச சபைத் தலைவர் எல்.பாரதிதாசன், நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, உள்ளிட்ட பிரதநிதிகள் கலந்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment