அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த பொதுத்தேர்தலின் போது பொதுஜனபெரமுன அரசாங்கம் அமைத்தால் ஞானசார தேரர் கல்முனைக்கு வருவார், தமிழர்களுக்கு கல்முனையை பிரித்தி கொடுப்பார் என்று போஸ்டர்கள் ஒட்டி அச்சமூட்டியே முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையில் மக்கள் வாக்குகளை பெற்றது.
பெரமுன அரசாங்கம் அமைத்தபின் ஞானசார தேரர் கல்முனைக்கு வந்து குழப்பம் செய்யவில்லை. மாறாக அவர் அமைதியாக கல்முனை வந்து போயிருப்பதும் அவரை கல்முனை முஸ்லிம்கள் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்திருப்பதும் மிகச்சிறந்த செயலாகும்.
ஒரே நாடு ஒரே சட்ட செயலணிக்கு தேரரை ஜனாதிபதி நியமித்தமையை பாராட்டிய ஒரே கட்சி எமது கட்சியாகும். அப்போது எம்மை தூற்றிய முஸ்லிம்கள் இன்று அவர்களாகவே முன் வந்து ஞானசாரவுடன் நல்லுறவை பேணுவதன் மூலம் ஜனாதிபதி அவர்களின் இந்த நியமனம் தூர நோக்கு கொண்ட மிகச்சிறந்த பாராட்டும்படியான செயல் என்ற எமது கருத்தின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment