இரண்டாம் மொழி சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.



றாசிக் நபாயிஸ்-
ரசகரும மொழிக் கல்வி திணைக்களத்தினால் பாராளுமன்றத்தில்
2007, 26ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட மொழி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரத்துக்கு அமைய அரச அலுவலகர்களுக்கு
நடாத்தப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிக் கற்கை நெறிகள் அரசாங்க சுற்றறிக்கைகளுக்கமைவாக தமிழ் பேசும் அரச அலுவலகர்களுக்கு சிங்கள மொழிப் பாடநெறியும்,சிங்கள மொழி பேசும் அரச அலுவலகர்களுக்கு
தமிழ் மொழிப் பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் அம்பாறை, மல்வத்தை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின்அரச உத்தியோகத்தர்கள் 48 பேருக்கு 150 மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறி பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மல்வத்தை
கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரசன்ன சஞ்சீவ அவர்களின்
தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஜீ.எல்.அ. சாமினி சோமதாச அவர்களும் சிறப்பு அதிதிகளாக திணைக்களத்தின் தலைமை பெரும்பாக உத்தியோகத்தர் ஜ.எல்.ஏ. கார்லிக், நிலையத்தின் விவசாய போதனாசிரியர் எம்.ரி.ஏ.கரீம் சிங்கள பாட நெறியின் வளவாளர் ஏ.எம்.எம்.முஜீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :