இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயதுப் பேராசிரியராக எம்.ஏ.எம். பௌசர்



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் எம்.ஏ.எம். பௌசர் மிக இளம் வயதில் பேராசிரியராகப் பதவியுயர்வைப் பெற்றுள்ளமை பல்ககைலக்கழக வரலாற்றில் முன்மாதிரியாக அமைகின்றது. 20-11-2020 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இப்பதிவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பதவியுயர்வின் மூலம் கலை கலாசாரப் பீடத்தின் இரண்டு பேராசிரியர்களைக் கொண்ட ஒரேயொரு துறையாக அரசியல் விஞ்ஞானத்துறை திகழ்கின்றமை பெருமைக்குரியதாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் விஷேட கற்கையினைப் பூர்த்தி செய்த பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர் அத்துறையில் முதல் வகுப்புப் பட்டத்தினைப் பெற்ற முதலாவது மாணவர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். தனது முதுகலைமாணிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ள இவர், முரண்பாடு மற்றும் சமாதானக் கற்கையில் டிப்ளோமாப் பட்டத்தினையும் மனித உரிமைகள் மற்றும் சமாதானக் கற்கையில் டிப்ளோமாப் பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :