ஜனாஸா நல்லடக்க ஏற்பாடுகளுக்கு ரஹ்மத் பவுண்டேஷன் உதவி



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கல்முனை கிளுகிளுப்புச் சங்கத்திற்கு ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில் மற்றும் கபன் துணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ. பாவா ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று அவர் குறுகிய காலத்திற்குள் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

இவற்றை குறித்த அமைப்பின் நிர்வாகிகளிடம் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் கையளித்துள்ளார். இதன்போது ஜனாஸா நல்லடக்கத்துடன் தொடர்புடைய பல விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது..

ரஹ்மத் பவுண்டேஷனின் இவ்வாறான சமூக சேவைத் திட்டங்களுக்கு வை.டபிள்யூ.எம்.ஏ. அனுசரணை வழங்கி வருவதாகவும் அதற்காக அவ்வமைப்புக்கு தனது உளப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதன் தலைவர் ரஹ்மத் மன்சூர் இதன்போது குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே சாய்ந்தமருது, மருதமுனை, நிந்தவூர், சம்மாந்துறை மற்றும் ஒலுவில் பிரதேசங்களுக்கும் ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :