புரவலா் புத்தகப் பூங்கா ஏற்பாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் பேராசிரியா் கே. எம். காதார் மொஹிதீன் மற்றும் துாதுக்குழுவினருக்கு கௌரவம்


அஷ்ரப் ஏ சமத்-
புரவலா் புத்தகப் பூங்கா ஏற்பாடு செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் முனீருல் மில்லத் பேராசிரியா் கே. எம். காதார் மொஹிதீன் அவா்களையும் அவருடன் கொழும்பு வந்து துாதுக்குழுவினர்கள் கௌரவிப்பு நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (6) கொள்ளுப்பிட்டியில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய பேராசிரியர் புரவலர் ஹாசிம் உமா் இலங்கை மட்டுமல்ல - இந்தியா நாடுகளிலும் பிரபல்யம் பெற்றுள்ளாா். அங்குள்ள ஊடகங்களிலும் அவா் நிகழ்வுகள் காணக்கிடைக்கின்றது. இந்தியா வருகை தந்து அங்கும் அவரே நுால்களின் முதற்பிரதிகளை பெற்றுவருகின்றாா். அவா் எழுத்தாளா்களின் நுால்களின் முதற்பிரதியை பெற்று இலக்கியவாதிகளுக்கும் நுாலாசிரியா்களுக்கும் கைகொடுப்பதனையிட்டு பேராசிரியா் காதா் மொஹிதீன் புரவலா் ஹாசிம் உமா் அவா்களை பாராட்டிப் பேசியதுடன் அவருக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தாா்.
.
இந் நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியா் தெ.செந்திவேலவா் பேராசிரியா் காதா் மொஹிதீனுக்கு பொன்னாடை போற்றியதுடன் புரவலா் புத்தகப் பூங்காவின் 27வது வெளியிடான வீ.தனபாலசிங்கம் எழுதிய ” ஊருக்கு நல்லது சொல்வேன் நுாலின் பிரதி ஒன்றும் கையளித்தாா்

”அமாக்க வாசம்” எனும் நுாலுக்கான அரச தேசிய விருது பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான அல் அஸூமத் அவா்களையும் பேராசிரியா் பாராட்டி கொளரவித்தாா்.
அரப் நியுஸ், கொழும்பு டைம்ஸ் பிரத ஆசிரியா் எம்.சி ரசூல்டீன் அவா்கள் திருச்சி மாவட்டத்தின் டொக்டா் ஜலீல் சுல்தான் அவா்களை கௌரவித்தாா்.

அத்துடன் வெலிகம றிம்சா முஹம்மதின் எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் எனும் சஞ்சிகை பேராசிரியருக்கும் ஏனைய இந்திய துாதுக்குழுவுக்கும் கையளிக்கப்பட்டது.

நேத்ரா தொலைக்காட்சியின் செய்திஆசிரியா் சியாம் காசிம். இந் நிகழ்வில் பேராசிரியரினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டாா். இந் நிகழ்வினை பத்திரிகை மற்றும் எலக்ரோனிக் ஊடகங்களின் ஊடகவியளாளா்களும் கலந்து சிறப்பித்தனா் இந் நிகழ்வினை வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் சித்தீக் ஹனிபா தொகுத்து வழங்கினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :