அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக , இலங்கை நிரவாகசேவையின் முதலாந்தர அதிகாரியான அம்பாறை மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக்கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவியுயர்வுபெற்றுச்சென்றுள்ளார்.
அவரது வெற்றிடத்திற்கு பொதுநிருவாக அமைச்சு இப்பதில் நியமனத்தை வழங்கியுள்ளது.
பாண்டிருப்பைச்சேர்ந்த வே.ஜெகதீசன், முன்னதாக ஆலையடிவேம்பு ,நாவிதன்வெளி ,காரைதீவு பான்ற பிரதேசயெலகங்களில் பிரதேசசெயலாளராக பணியாற்றி, இறுதியாக 2019இல் பதவியுர்வுபெற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சீரிய பணியாற்றிவந்திருந்தார்.
கடந்த 7ஆம் திகதிமுதல் இப் பதில் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
0 comments :
Post a Comment