டயகம ஆக்ரோயாஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு - பல கோணங்களில் விசாரணை



க.கிஷாந்தன்-
யகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று 06.12.2021 அன்று மாலை மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவத்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த டயகம பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :