கோமாரியில் காட்டுயானை அட்டகாசம்: வீடு வாசல்கள் பாரிய சேதம்!



வி.ரி.சகாதேவராஜா-
காட்டுயானையொன்றின் அட்டகாசத்தால் மக்கள் பாரியசேதங்களை சந்திப்பதுடன் அச்சத்துடன் வாழவேண்டிய துர்ப்பாக்கியநிலையும் எழுந்துள்ளது.இந்நிலைமை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரிப்பிரதேசத்தில் நிலவிவருகிறது.

நேற்று(8)புதன்கிழமை அதிகாலை, கோமாரி செல்வபுரக்கிராமத்துள் புகுந்த தனியன் யானை வீடுவீடாய்ச்சென்று சேதத்தைவிளைவித்துச்சென்றுள்ளது. மக்கள் பயபீதியுடன் அலடியடித்துக்கொண்டு ஓடினர்.

புளொக்கல்லால் கட்டப்பட்ட சில வீடுகளை தும்பிக்கையால் உடைத்து எறிந்துள்ளது. வீடடுக்குள்ளிருந்த நெல்மூடைகளை உறிஞ்சிக்குடித்துள்ளது. நேற்று (8)இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கோமாரிப்பிரதேசத்திற்கான பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் சம்பவத்தையறிந்து கிராமசேவையாளருக்கு அறிவித்துவிட்டு ஸ்தலத்திற்கு விரைந்து ஆகவேண்டிய வேலைகளைக் கவனித்தார்.

தொடர்ச்சியாக இந்த தனியன் யானையொன்று இநத அட்டகாசத்தை செய்துவருகிறது. பொதுமக்கள் கோமாரிப்பிரதேசத்திற்கான பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் மற்றும் கிராமசேவையாளருடாக தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கயும் எடுக்கப்படுவதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்தவாரம் இப்பிரதேசத்திலுள்ள காட்டுமடு எனும் வயற்பிரதேசத்தில் ஆலையடிவேம்பு கண்ணகிபுரத்தைச் சேர்ந்த து.கஜேந்திரன்(வயது24) இளம் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டமை தெரிந்ததே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :