வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற அதிபர் பரீட் கிரிக்கெட் சுற்றுத் தொடரை ஆயிஷா லகான் அணி சுவீகரித்துக் கொண்டது.
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கிடையில் புதன்கிழமை (22) நடைபெற்ற இத் தொடரில் மூன்று அணிகள் பங்குபற்றின.
இதில், ஆயிஷா லகான், ஆயிஷா கிங், ஆயிஷா வோரியோர்ஸ் ஆகிய மூன்று அணிகள் கலந்து கொண்டன.
அணிக்கு ஆறு பேர் ஐந்து ஓவர்களைக் கொண்ட இத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆயிஷா லகான் மற்றும் ஆயிஷா கிங் ஆகிய அணிகள் மோதின.இறுதிப் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய ஆயிஷா கிங் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆயிஷா லகான் அணி ஐந்து ஓவரில் 34 ஓட்டங்களை பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
வெற்றிபெற்ற அணிக்கு பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment