கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து முற்றிலும் இலவசமான சுதேச மருத்துவ நடமாடும் சேவையை திருகோணமலை - மூதூர் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரியில் (10) இடம்பெற்றது.
மூதூர் பள்ளிக்குடியிருப்பு கிராம மக்களுக்கு ஆயுள்வேத மருத்துவ சேவையை அவர்களின் காலடிக்குச் சென்று வழங்க வேண்டும் என்ற நோக்கில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதரின் ஆலோசனைக்கும், மேற்பார்வையின் கீழ் இடம்பெற்ற இந்த நடமாடும் வைத்திய சேவையில் வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ், எம்.எம்.பாத்திமா இஷாரா, எஸ்.தமிழரசி, எஸ்.நவரத்தினம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு.எஸ்.பிரசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நடமாடும் சேவையில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து வைத்திய சிகிச்சைகளை பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment