மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.சாணக்கியன் ஐயா அவர்களின் குரல் முஸ்லிம் சமூகமானது இன்னல்களை சந்தித்த போதெல்லாம் சர்வதேசம் வரை ஒலித்தது.அவர் மீது குறித்த சமூகத்தினர் அது நான் உற்பட இன்றளவும் மரியாதையும்,பற்றும் வைத்திருக்க அது மிக முக்கிய காரணம்.
எனினும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு காணிப்பிரச்சினையே இல்லை என்ற அவரின் கூற்றை நிச்சயமாக ஒரு போதும் துளியளவேனும் ஏற்றுக்கொள்ள முடியாது.முஸ்லிம் மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகளும், எல்லை நிர்ணய பிரச்சினைகளும் ஏராளமாக உண்டு என்பதற்கு நியாயமான எத்தனையோ விடயங்கள் உண்டு. அவற்றை விரிவாக நடுநிலமையாக ஆராய்கின்ற எவராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதே உண்மை.
குறிப்பாக கோரளை மத்தி பிரதேச செயலக விவகாரம், பிரதேச செயலகங்களின் எல்லை நிர்ணய விவகாரம்(குறிப்பாக காத்தான்குடி பிரதேச எல்லை நிர்ணய விவகாரம்), மண்முனைப்பற்று(ஆரையம்பதி) பிரதேச செயலகப்பிரிவில் உள்ள காணிப்பிரச்சினைகள், பாலமுனை(மன்முனைப்பற்று) கிராம சேவகர் பிரிவு விவகாரம் போன்றன எனக்கு தெரிந்த வகையில் நாம் எதிர்கொண்டுள்ள சில காணிப்பிரச்சினைகள்.இவற்றை தாண்டியும் எத்தனையோ விடயங்கள் எம்முன்னே உள்ளன என்பது கசப்பான உண்மையாகும்.இவ்வாறான பிரச்சினைகள் காலாதிகாலமாக இருந்துவர யார் காரணமானவர்கள் என்பதும் இது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து நடுநிலமையாக நோக்குகின்ற யாவரும் புரிந்துகொள்வர்.
இவ்வாறான பிரச்சினைகள் யாவும் இம்மாவட்டத்தில் பின்னிப்பினைந்து வாழ்கின்ற இரு சமூகங்களின் விருப்பத்துடனும் நடுநிலமையான சிந்தனையுடன் நியாயமான முறையில் தீர்த்து வைக்கப்பட வேண்டுமென்பதே எமது அவா.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத்தாண்டி பேசப்படுகின்ற விடயத்தின் முக்கியத்துவமும் உண்மைத்தன்மையுமே,இங்கு முக்கியமானது என்பதே எனது கருத்து.
0 comments :
Post a Comment