மாணவர்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்வு



பைஷல் இஸ்மாயில் -
திருகோணமலை - மூதூர் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு போசனை பற்றிய நிர்பீடண அதிகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி உ.பரமேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் ஆலோசனைக்கும், மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ், எம்.எம்.பாத்திமா இஷாரா, எஸ்.தமிழரசி, எஸ்.நவரத்தினம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு. கே.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்ட சுமார் 600 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு போசனை இலைக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :