கொவிட் 19 தடுப்பூசி முதலாவது ஆண்டு பூர்த்தியை நினைவு கூறுவதுடன் அதற்காகப் பாடுபட்ட அனைவரையும் வாழ்த்தும் நிகழ்வு



றம்ஸீன் முஹம்மட்-
மது நாட்டையும் சர்வதேசத்தையும் உலுக்கிய கொவிட் – 19 வைரசு தொற்று காரணமாக அத் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதார திணைக்களத்தால் கட்டம் கட்டமாக தடுப்புசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று 3வது தடுப்புசி வழங்கும் நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம்.
கொவிட் 19 தடுப்பூசி முதலாவது ஆண்டு பூர்த்தியை நினைவு கூறுவதுடன் அதற்காகப் பாடுபட்ட அனைவரையும் வாழ்த்தும் நிகழ்வு நேற்று சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சமய அனுஷ்டானத்துடனும் தேசிய கீதத்துடனும் கொவிட் -19 தொற்று காரணமாக மரணித்தவர்களுக்காக 2 நிமிட மெளன அஞ்சலியுடனும் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வை தாதிய பரிபாலகர் பீ.எம்.நஸீறுதீன் சிறப்பாக ஒருங்கிணைத்து நடாத்தியதுடன் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் , வைத்தியசாலை வைத்தியர்கள் , வைத்தியர்கள் தாதி உத்தியோகத்தர்கள் ,சுகாதார உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :