2022 ஆம் ஆண்டின் முன்பள்ளிப் பாலர் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. இத்தொடரில் இறக்காமம் பிரதேசத்தில் காணப்படும் பாலர் பாடசாலைகளின் வித்தியாரம்ப நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் இறக்காமம் பிரதேச Global Change Makers - GCM முன்பள்ளிப் பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு புதன் கிழமை பாலர் பாடசாலையின் ஆசிரிகைகளான யூ.எல். சபினாஸ், யூ.எல். பாத்திமா நஸ்பா, எம்.ஜெஸானா பர்வின் ஆகியோரின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றௌஸானின் தலைமையில் இடம்பெற்றது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாடின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இறக்காமம் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.ஸபூறுல் ஹஸீனா மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எஸ்.எப். றிஸ்மியா ஜஹான் ஆகியோரும் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment