2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 2022.01.01 அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.பி.எம்.றஜீஸ் தலைமையில் இடம்பெற்றது.
2022 ஆம் ஆண்டின் அரச சேவைக்கான கடமைச் செயற்பாடுகளை உறுதி செய்யும் உறுதிமொழி சத்திய பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 2022 ஆம் ஆண்டில் சமூகப் பொருளாதார எதிர்பார்ப்புகளை அடைந்து கொள்ளும் பொருட்டு ஒருமித்த எண்ணத்துடன் அனைத்து அரசு ஊழியர்களும் செயற்படல் வேண்டும். அரச வளங்களை வினைத்திறன் மிக்கதாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்கால பரம்பரையினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை அரச ஊழியர்கள் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரஜைகளை, மகிழ்ச்சியான குடும்பங்களை, பண்பாடான ஒழுக்க ரீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்காக அரச சேவையின் மகத்தான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும் என சகல வைத்தியர்களும், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் உறுதிமொழி வழங்கினர்.
0 comments :
Post a Comment