23வது கொடகே தேசிய சாகித்திய விருது-2022 கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிப் போட்டி-2020 விருதுகள் வழங்கும் விழா




23வது கொடகே தேசிய சாகித்திய விருது-2022 விழாவும், கொடகே தேசிய 2020 க்கான தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் பெப்பரவரி 2 ந்திகதி புதன்கிழமை பிற்பகல் 2.30மனி கொழும்பு-7 யில் அமைந்துள்ள கொழும்பு பொது நூலகத்தில் சுகாதார விதிகள் படி நடைபெறும். இந்த நிகழ்வில் 23வது கொடகே தேசிய சாகித்திய விருது-2021க்கான விருதுகளாக மல்லிகை சி.குமாரின் “வேடத்தனம்‘ எனும் சிறுகதைத் தொகுப்புக்கும், வெலிமடை ரபீக்கின் “ ஒரு நானும் இன்னும் ஒரு நானும் ‘ எனும் கவிதைத் தொகுப்புக்கும், மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது சிங்களத்திலிருந்து எம்.ரிஷான் ஷரீப் தமிழில் மொழிபெயர்த்தட கத்யானா அமரசிங்ஹ வின் தரணி- எனும் நாவலுக்கும் ,முதல் நூல் நூலுக்கான விருதினையும் ஆ.லெ.மு.இர்ஷாத்தின் ஒளி பூக்கும் இரவு எனும் ஹைக்கூ தொகுதிக்கும் வழங்கப்படும்...

2020க்கான கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகளுக்கான போட்டியில் -சிறந்த சிறுதைத் தொகுப்பாக தெரிவு செய்ய்ப்பட்ட பாலரஞ்சனி ஜெயபாலின் ' நெத்திக்காசு' எனும் தொகுப்புக்கும், சிறந்த கவிதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்ட ஜன்ஸி கபூரின் ' பிறப்பிட நிழலிலே' எனும் தொகுப்புக்கும் விருதுகள் வழங்கப்படும், மற்றும் ஆங்கில, சிங்கள நூல்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.

சுதார விதிகள்படி நடைபெறும் விழா மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பாளர்களை கொண்டு இவ்விழா நடைபெறும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :