மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 250 மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள் அண்மையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் முசலி பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு. ரஜீவ் , பிரதேச சபை உறுப்பினர்கள், கலாசாலை அதிபர்கள் ,தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும்கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment