பி.எஸ்.ஐ.கனி-
23 ஜனவரி 2022 / புதுடெல்லி: நாடு தனது 72-வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ள நிலையில், நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களில் இருந்து அதனை பாதுகாக்க, “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை தொடங்குவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நாடு 75 ஆண்டு கால சுதந்திரத்தை கொண்டாட உள்ள சூழலில், நாட்டின் ஜனநாயகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதைய அரசு, கடுமையான கருப்புச் சட்டங்களை கொண்டு எதிர்கருத்துகளையும், அரசியல் எதிர்ப்புகளையும் ஒடுக்கி வருகிறது. முந்தய காலங்களோடு ஒப்பிடுகையில் யூஏபிஏ போன்ற கருப்புச் சட்டங்களை பிரயோகிப்பது 75 சதவீதம் அதிகரித்துள்ளது.
வறுமை, சாதிய ஒடுக்குமுறை, வகுப்புவாதம், சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை, மோசமான கல்வியறிவு, சுகாதார நிலை என நாடு பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழலில், இது போன்று அரசியல் எதிர் கருத்துகள் முடக்கப்படுவது என்பது மக்களாட்சி எதிகொள்ளும் ஒரு புதிய அச்சுறுத்தல் ஆகும். ஊடகங்களின் சுதந்திர செயல்பாடுகள் முடக்கப்பட்டு, அரசின் ரகசிய உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்பட வற்புறுத்தப்படுகின்றன.
முன் எப்போதும் இல்லாத அளவு மதவாத வெறுப்பு பரவலாக்கப்பட்டு, நாட்டின் சிறுபான்மையினர் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என்கிற கருத்துகள் பொது தளங்களில் ஒலிக்க துவங்கியுள்ளது. இதற்கு எதிரான பாரம்பரிய கட்சிகளின் பலவீனமான செயல்பாடுகள் மேலும் கவலை அளிப்பதாகவே உள்ளது. தற்போதைய இந்த ஆபத்தான சூழலில், எதேச்சதிகாரத்தை எதிர்த்து, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாத்து, மக்களாட்சியை உறுதி செய்வது என்பது மக்கள் சக்தியினால் மட்டுமே சாத்தியப்படும் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
எனவே “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை, இந்திய நாட்டின் ஒரு முனையான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் துவங்க இருக்கின்றது. தொடர்ந்து நாடு முழுவதும் பேரணிகள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் மூலமாக நடைபெற இருக்கின்ற இப்பிரச்சாரம், நாட்டின் 75 ஆவது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் வரலாற்றில் இதுவரை முன்னெடுத்த பிரச்சாரங்களில் இதுவே மிக நீண்ட பிரச்சாரம் என்பது குறிப்பிடத்தக்கது. என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments :
Post a Comment