கல்முனை ஹோலிபீல்ட விளையாட்டு கழக 26 வது வருடாந்த பொதுகூட்டமும், நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும்.



நூருள் ஹுதா உமர்-
ல்முனை பிரதேசத்தின் மூத்த கழகங்களில் ஒன்றான கல்முனை ஹோலிபீல்ட விளையாட்டு கழகத்தின் 26 வது வருடாந்த பொதுகூட்டமும், நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் சமாதான கற்கைகள் நிலைய சாம்மாந்துறை வளாகத்தில் கழக செயலாளர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எல். றியாஸின் நெறிப்படுத்தளில் கழக தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மின் இந் தலைமையில் இன்று சனிக்கிழமை (22) இரவு நடைபெற்றது.

இந்த பொதுகூட்டத்தில் கடந்தாண்டின் இறுதி கூட்டத்தின் கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை விடயங்கள் என்பன எடுத்துரைக்கப்பட்டு சபையோரின் அங்கீகாரம் பெறப்பட்டதுடன் கல்முனை ஹோலிபீல்ட விளையாட்டு கழகம் 26 வருடங்கள் கடந்து வந்த பாதைகள் தொடர்பிலும், கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் கழக நிர்வாகிகளினால் நினைவு உரைகள் நிகழ்த்தப்பட்டது.

கழகத்தின் கால் நூற்றாண்டு விழா நிகழ்வுகளை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி தொடர்பிலுமான விடயங்கள் இங்கு ஆராயப்பட்டதுடன், சாதனையார்களின் கௌரவிப்புக்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம். தெரிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் புதிய நிர்வாக தலைவராக மீண்டும் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மின், செயலாளராக பேராசிரியர் கலாநிதி எஸ்.எல். றியாஸ், பொருளாளராக எம்.எச்.எம். ஹனீஃப் ஆகியோரும் தவிசாளராக சமீர் ஜுனூஸ் மற்றும் பிரதித்தவிசாளராக யூ.எல்.எம்.றியாஸ், உபசெயலாளராக பஸ்மி காசிம், கலாச்சார செயலாளராக மௌலவி சபா முஹம்மத் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளன தலைவர் இந்திக்க நளின் ஜெயவிக்ரம, செயலாளர் சித்தார்த் லியானாராய்ச்சி, செயற்குழு உறுப்பினர்கள் கண்காணிப்பாளர்களாக கலந்து கொண்டதுடன், கல்முனை ஹோலிபீல்ட விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளன நிர்வாகிகள் கல்முனை ஹோலிபீல்ட விளையாட்டு கழக நிர்வாகிகளினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :