ஆளுநரின் ஆளுநரின் துணை செயலாளர் ஜெயக்குமார் அவர்களும் மற்றும் உதவி. ஆளுநர் டாக்டர் கருணாகரனும் அவருடன் இணைந்து கொண்டார்கள் .
திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - த அகிலன் விருந்தினர்களை வரவேற்று, வரவேற்புரையை நிகழ்த்தினார் .
செயலாளர் க பிரபாகரனால் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.
தி / ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வெற்றியாளர் செல்வி எம். அகன்ஷா அவர்களுக்கு ரொக்க விருது மூலம் பாராட்டப்பட்டு கௌரவிக்கப் பட்டார்.
தலைவர் அகிலனால் புல் வெட்டும் இயந்திரம் ஓன்று திரு வேலாயுதம் அவர்களுக்கு வழங்கப் பட்ட்து.
தி / கணேச வித்யாலயம் & தி / தங்கபுரம் பாடசாலையின் தலைமையாசிரியர்கள் “கிராமப் பள்ளிகளுக்கு கணனி” என்ற திடடத்தின் கீழ் கணனிகளைப் பெற்றுக் கொண்டனர். மேலும் 6 பாடசாலைகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப் படும்.
ஆளுநரின் துணை செயலாளர் ஜெயக்குமார் அவர்களால் மாவட்ட ஆளுநர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஆளுநர் அருணி மலலசேகர, தமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். புதிய திட்ட்ங்களை உருவாக்கி மக்களுக்கு சிறந்த சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் ரோட்டரி பெயரைஎடுத்து செல்லவேண்டும் என எடுத்துரைத்தார்
2022-2023 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட திரு .கிட்டினதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment