40 வது ஆண்டை சிறப்பித்த சம்மாந்துறை அஸ்ஹர் வித்தியாலய "அஸ்ஹரியன் பேரட்" : வீதி உலா வந்த பாடசாலை சமூகம் !


நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்-
ம்மாந்துறை கல்விவலய கமு /சது/ அல்- அஸ்ஹர் வித்தியாலய 40 வது ஆண்டு நிறைவுவிழாவும் விழிப்புணர்வு பேரணியும் பாடசாலை அதிபர் ஏ. அப்துல் றஹீம் தலைமையில் இன்று (23) நடைபெற்றது.

ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பு, பாடசாலை அபிவிருத்தி சங்கம் பாடசாலை சமூகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் 40 வருடங்களாக இப்பாடசாலையில் கல்விபயின்ற மாணவர்கள் வருகைதந்து பேரணியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கனரக வாகனங்கள், வட்டா ரக லொறி, பஸ், மோட்டார்சைக்கிள், துவிச்சக்கர வண்டி, மாட்டுவண்டி என்பன பேரணியாக சென்று சம்மாந்துறை மீயண்ணா சந்தி ஊடாக அல்- அரசாத் தேசிய பாடசாலை வீதியூடாக விளிணையடி சந்தியை அடைந்து ஹிஜ்ரா சுற்றுவட்டமூடாக வருகைதந்த வாகன பேரணி மீண்டும் மீயண்ணா சந்தியிலிருந்து நடைபவனியாக பாடசாலையை வந்தடைந்தது.

பின்தங்கிய பிரதேசத்தில் பாடசாலை அமைந்திருக்கின்றமையினால் பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களை தொடர்ந்தும் பாடசாலையின் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையாகவும் சமூக நலன்விரும்பிகளை பாடசாலைக்கு உதவும் வகையில் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமாகவும் இந்த "அஸ்ஹரியன் பேரட்" அமைந்துள்ளதாக ஏற்பட்டு குழுவினர் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :