மறைந்த ஆளுனா் அலவி மொளலானாவின் 90 வது பிறந்த தினம்



அஷ்ரப் ஏ சமத்-
றைந்த ஆளுனா் அலவி மொளலானாவின் 90 வது பிறந்த தினம் ஜனவரி 1ஆம் திகதியாகும் . மறைந்த அலவி மௌலானாவின் புதல்வா்கள் நக்கீப் மௌலானா மற்றும் ரக்கீப் மௌலானாவும் இணைந்து நினைவுதினப் பேச்சு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனா். இந் நிகழ்வில் மௌலானா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியவா்கள் கலந்து கொண்டனா். இந் நிகழ்வு ஜனவரி 1ஆம் திகதி தெஹிவளையில் உள்ள சிலோன் ரோஸ்வூட் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. தலைமையுரையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் சுமித் விஜேசிங்க, உரையாற்றினாா்.

இந் நிகழ்வில் கல்வியமைச்சா் தினேஸ் குணவா்த்தன, நீதியமைச்சா் அலிசப்றி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியா் திஸ்ஸ விதாரண, ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ,ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, அலிசாஹிா் மௌலானா பிரதம மந்திரியின் மேலதிகச் செயலாளா் சுமித் குலதுங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சருக் மற்றும் சவுதி அரேபியா துாதுவரலாயத்தின் செயலாளா் கலாநிதி காலித் அல் மக்கா ஆகியோா்களும் கலந்து சிறப்பித்தனா்.

இங்கு உரையாற்றிய கல்வியமைச்சா் தினேஸ் குணவா்த்தன -

மறைந்த அலவிமௌலானா சிறிமாவோ பண்டாரநாயக்க, தொட்டு சந்திரிக்கா மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோாகளது ஆட்சியில் கட்சிக்குள் அரசுக்குள் இனங்களுக்குள் அவ்வப்போது ஏற்படும் பிணக்குகளை தீா்த்துவகை்கும் ஒரு சமாதான பாலமாகவும் ஒர் தூதுவராகவும் செயல்பட்ட ஒரு தொழிற்சங்கவாதி ஜ.தே.கட்சியின் .ஆட்சிக் காலத்தில் தொழிற்சங்க ரீதியாக தொழில்களை இழந்தவா்கள் மற்றும் நீதி நியாயம் கேட்டு சிறைவாசம் அனுபவித்தவா். அவரது குடும்ப உறுப்பினர்களும் அதில் பல கஸ்டங்களை அனுபவித்தவா்கள். அவா் ஒரு போதும் இன.மத கட்சி ரீதியாக சிந்திக்காது செயல்பட்டாா். அவா் தொழில் மற்றும் ஊடக அமைச்சராகவும் 9 வருடங்கள் பணியாற்றினாா். அதன் பின்னர் அவா் கூடிய காலம் மேல்மாகாணத்தில் ஆளுனராக பணியாற்றினாா்.

ஒரு முறை நானும் அவருடன் வாகனமொன்றில் ஆர்பாட்டமொன்றுக்காக சென்றிருந்தோம் அப்போது ஜ.தே.கட்சி ஆட்சியில் உடன் ஊரங்கு பிறப்பித்தாா்கள் நாங்கள் ஆர்ப்பாட்டத்திற்காக வீதி இறங்கினோம். மௌனாவுடன் வாசுதேவ, கலாநிதி விக்கிரமாபாகு போன்றோா்கள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டாா்கள். இன்று ஜனவரி 1ஆம் திகதி அவரது 90 வது பிறந்த தினத்தில் நாம் இங்கு ஒன்று கூடி அவர் செய்த சேவைகள் அவரது பண்புகள் அடுக்கு மொழிப் பேச்சுக்கள் நினைவு கூறுகின்றோம். அவா் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க - மகிந்த ராஜபக்ச பிணக்குகளை தீா்த்து மகிந்த ராஜபக்சவுக்கு பிரதம மந்திரி பதவி கொடுக்கப்படல் வேண்டும் என சந்திரிக்காவிடம் வாதிட்டாா். இவைகள் வரலாறுகள் என கல்வியமைச்சா் திரேனஸ் குணவா்த்தன தெரிவித்தாா்

அத்துடன் முன்னாள் ஜனாதிபதிசந்திரிக்கா பண்டார நாயக்கவின் செய்தி வாசிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :