ஒரு மனிதன் சரியான பாதையில் பயணித்தால் அதிக விமர்சனங்களை சந்திக்க நேரிடும் : கட்சி பேதங்களுக்கு அப்பால் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள் - முஸர்ரப் முதுனபீன் எம்.பி



ஐ.எல்.எம். நாஸிம்-
க்களின் பிரச்சினைகளை தீர்க்கவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸர்ரப் முதுனபீன் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்துரைத்த அவர், அம்பாறை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் மிக கூடுதலாக காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது உழைத்து விட்டு மக்களை ஏமாற்றும் அரசியல் அல்ல மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மட்டுமே என்று தெரிவித்தார்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை நீண்ட கால மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு இருக்கின்றது . முக்கியமாக நான் ஓர் ஊடகவியலாளர் விமர்சணங்களே எனது வெற்றி ஒரு மனிதன் சரியான பாதையில் பயணித்தால் தான் அதிக விமர்சணங்களை சந்திக்க நேரிடும் அதே போல தான் விமர்சணங்களை நான் என் வெற்றியாகவே பார்க்கிறேன் என்று மேலும் தெரிவித்தார்.

நான் தேர்தல் காலத்தில் கூறியது போலதான் எனக்கு வழங்கப்பட இருக்கு வாகன கோட்டாவை பள்ளி நிறுவாகத்திடம் ஒப்படைத்து அதில் தொழில் ஊக்குவிப்பை மேற்கொண்டு வரும் இலாபத்தை கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எண்ணியுள்ளேன். ஓர் தொழிலுக்கு போடும் முதல் அப்படியே இருக்கும் நான் பாரளுமன்ற உறுப்பினர் இல்லாமல் போனாலும் இதில் இருந்து வரும் இலாபம் மக்களுக்கு உதவ வேண்டும். அதில் இருந்து ஓரு ரூபாயும் எனக்கு தேவையில்லை.இதற்காக நான் ஒர் குழுவை அமைக்க எண்ணியுள்ளேன்.
நான் பொத்துவில் மண்ணுக்கு மட்டும் பாராளுமன்ற உறுப்பினர் அல்ல அம்பாறை மாவட்டத்துக்குரிய பாரளுமன்ற உறுப்பினர் கட்சி பேதங்களுக்கு அப்பால் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்.இது நமக்கான நேரம் தீர்வே முடிவு என அவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :