மருதமுனை பிரதேச வைத்தியசாலையின்பொதுமக்கள் சேவை வழமைக்கு திரும்பியது



ஏ.எல்.எம்.ஷினாஸ், பி.எம்.எம்.ஏ.காதர், றாசிக் நபாயிஸ்-
ருதமுனை பிரதேச வைத்தியசாலையில் மீள பொது மக்களுக்கான சேவையை ஆரம்பிக்கும் நடவடிக்கை (01.01.2022) உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் .ஏ.எல்.எம்.மிஹ்லார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர். எம். தெளபீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைத்தியசாலையை திறந்து வைத்தார்

கடந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்ததை அடுத்து கல்முனைப் பிராந்தியத்தின் சில வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கும் நிலையங்களாக மாற்றப்பட்டது.

மருதமுனை பிரதேச வைத்தியசாலையும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மத்திய நிலையமாக மாற்றப்பட்டது. குறித்த இடத்தில் இருந்த பிரதேச வைத்தியசாலை கிழக்கு பக்கமாக இருக்கின்ற சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

எனினும் தற்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் சேவைகளை மீள ஆரம்பித்து வைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர், குணசிங்கம் சுகுணன், பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பி. அப்துல் வாஜித், கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்,ஏ. ஆர். எம்.அஸ்மி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் வைத்திய பொறுப்பதிகாரிகள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர், பொதுமக்கள், ஊர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :