நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் பிறந்திருக்கும் ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றலும் மரநடுகையும் இன்று 01.01.2022ம் திகதி சனிக்கிழமை மருந்தகத்தின் வைத்திய அதிகாரி Dr எம்.றிகாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மருந்தக ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் வைத்திய அதிகாரி Dr எம்.றிகாஸ் அவர்களினால் தேசியக்கொடியேற்றப்பட்டு மரக்கன்றும் நடப்பட்டது.
அமானா வங்கி ஊழியர் எம்.றபீக் அவர்களின் அனுசரனையில் வாழைச்சேனை வலைக்கடை உரிமையாளர் சகோதரர் மாஜிதீன் அவர்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகளைப் பாதுகாக்கும்
சுமார் 12,000 ரூபா பெறுமதியான ஆறு அடி உயரம் கொண்ட நான்கு கூடுகள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன.
இக்கூடுகளை அன்பளிப்புச் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment