வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா !


நூருல் ஹுதா உமர்-
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் காரியாலயத்தால்  நடாத்தப்பட்ட  ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பதவியுயர்வு பெற்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சம்மாந்துறை வேலைத்தள காரியாலயத்தில், கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இஸட்.ஏ. முஹம்மட் அஸ்மீரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண காரியாலயத்தின் மேலதிக பணிப்பாளராக அண்மையில் நியமனம் பெற்ற பொறியியலாளர் எம்.பி.எம். அலியார், கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளராக இருந்து அக்கரைப்பற்று காரியாலய பிரதம பொறியலாளராக பதவியுயர்வு பெற்ற பொறியியலாளார் ரீ. சிவசுப்ரமணியம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண காரியால மனிதவள மேம்பாட்டு  உத்தியோகத்தராக இருந்து ஓவுபெற்ற டப்ளியு.ஏ. அசோகா மல்காந்தி போன்றோர்கள் இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு கௌரவிப்பு நிகழ்வை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :