கல்முனைப் பிரதேசத்தில் கலை இலக்கிய துறைகளை வளர்த்து தங்களுக்கென தனியிடம் பிடித்து சமூகத்துக்கு முன்மாதிரியாக வாழ்த்து எம்மை வீட்டுப் பிரிந்த இலக்கிய வாதிகளை நினைவு கூர்ந்து சமகாலத்தில் இருக்கின்றன கலை, இலக்கியவாதிகளால் தொகுத்து வெளியிடப்பட்ட
"மாண்டவர் மகத்துவம்" ஒளிப்பேழை வெளியீட்டு நிகழ்வு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவஜோதியின் ஒருங்கிணைப்பில்
பிரதேச செயலாளர் ஜே.ஜேலியாகத் அலி தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன், உலகக் கவிஞர் சோலைக்கிளி, கவிஞர் மருதமுனை ஹஸன், கவிஞர் விஜிலி, கவிஞர் ஸாஹிர் கரீம், வீடியோ எடிட்டர் ஸாஹிர், கவிதாயினி சுல்பிஹா சரீப் ஆசிரியை, கலாசார உத்தியோகத்தர் ஹிபானா, ஒய்வு நிலை ஆசிரியர் குமாயூன்,
கவிஞர் மாஹிறா, பாடகி எஸ். ஜெஸ்மின் இஸ்றத் மற்றும் இம்திஸா ஹஸன்
என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment