வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி -1 பழைய மக்கள் வங்கி வீதியில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று (28) மாலை காணாமல் போயுள்ளார்.
தனது வீட்டிலிந்து நேற்று மாலை 3 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் இதுவரை வீடு திரும்பாத நிலையில் சிறுவனை பெற்றோர்கள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவன் சென்ற துவிச்சக்கர வண்டியும் அவர் அணிந்திருந்த மேற்சட்டையும் இன்று 29 ஆம் திகதி கல்குடா - கல்மலை கடலோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவன் கடலில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் கல்குடா பொலிஸாரின் உதவியுடன் சுழியோடிகள் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment