கிழக்குப் பல்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் கடமையேற்ப்பு!



ஏறாவூர் நிருபர் நாஸர்-
லங்கை கிழக்குப் பல்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் இன்று 22.01.2022 காலை கடமையேற்றுக்கொண்டார்.
கிழக்குப்பல்கலைககழத்தின் மட்டக்களப்பு - வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள அலுவலகத்தில் சர்வமத ஆசீர்வாதத்துடன் கடமையேற்பு நிகழ்வு நடைபெற்றது.

பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் இலங்கை கிழக்குப் பல்கழகத்தின் உபவேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 25 வருடகால வரலாற்றைக்கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது உபவேந்தராக மட்டக்களப்பு - கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது கடமையேற்பு நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் ஏ. பகிரதன் ,பிடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முகாமைத்துவப் பேராசிரியரான வல்லிபுரம் கனகசிங்கம் இதற்கு முன்னர் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் முதல்வராகப் பணியாற்றியவராவார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :