தொலைந்து போன பெண்ணொருவரின் எட்டு பவுன் நகைகளை வேறு பெண்ணொருவர் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று இன்று (21) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோழிக்கடை வீதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது நகைகளை எடுத்துச் செல்லும் போது கடந்த 19 ஆம் திகதி தவற விட்டுள்ளார்.
அவ்வாறு தவற விட்ட நகைகளை அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஏழ்மையான நிலையிலும் நகைகளை கண்டெடுத்து ஒப்படைத்த பெண்ணுக்கு நகை உரிமையாளர் சில நகைகளை அன்பளிப்பு செய்த போதும் அதனை அந்த பெண்மணி ஏற்க மறுத்துள்ளார்.
நகைகளை கண்டெடுத்து ஒப்படைத்த பெண்ணுக்கு நகை உரிமையாளர் உட்பட பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment