கொரோனாவினால் மரணமடைந்து ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கான விஷேட துஆ பிராத்தனையும் அவர்கள் நினைவாக உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று ஓட்டமாவடியில் இடம் பெற்றது.
கொரோனாவினால் மரணமடைந்த எஹலியகொட பாத்திமா இஸ்ரத் அவர்களின் நினைவாக அவரது தந்தையின் நிதியளிப்பில் மஜ்மாநகர் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்களின் மின்சார தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்காக தலா ஒரு குடும்பத்திற்கு 23150.00 ரூபா வீதம் ஏழு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதுடன் ஒரு குடும்பத்திற்கு நீர் தாங்கியும் வழங்கி வைக்கப்பட்டது.
அல் மஜ்மாஹ் மஸ்ஜித் ஜாமிஉல் அக்பர் பள்ளிவாயல் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மௌலவி எஸ்.எம்.அபுல் ஹஸன் விஷேட துஆ பிராத்தனையை நடாத்தினார்.
0 comments :
Post a Comment