கடந்த மாதம் பாக்கிஸ்தானில் கொலைசெய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நிகழ்வு 20.01.2022 பாக்கிஸ்தான் நாட்டின் புதிய உயா் ஸ்தானிகா் மேஜா் ஜெனரல் உமா் பாருக் புர்க்கி தலைமையில் பாக்கிஸ்தான் உயா்ஸ்தானிகா் கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற சபாநாயகா் மகிந்த யாப்பா , இளைஞா் விளையாட்டுத்துறை அமைச்சா் நாமல் ராஜபக்ச மற்றும் சர்வமதத் தலைவா்களும் பிரியந்த குமாரவின் மனைவி குழந்தைகைளும் துாதரக அதிகாரிகளும் இவ் அனுதாப கூட்டத்தில் கலந்து கொண்டனா்
பிரியந்த குமாரவின் மனைவி பிள்ளைகளுக்கு பரிசுப் பொருட்களும் உயா்ஸ்தானிகரினால் வழங்கி வைக்கப்பட்டது.
உயா்ஸ்தானிகா் இங்கு உரையாற்றுகையில்;
பாக்கிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் பிரியந்த குமாரவின் மரணத்திற்கு காரணமானவா்களை உடன் சட்டத்தின் முன் நிறுத்தி அவா்களுக்கு பாக்கிஸ்தான் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவிருத்தல் வழங்கியுள்ளாா். அத்துடன் நிவாரண உதவிகளையும் வழங்கிவைத்துள்ளாா். அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற பாக்கிஸ்தானியா்கள் 4 மி்ல்லியன் அமெரிக்க டொலரும் , கனடாவில் வாழும் பாக்கிஸ்தானியா்கள் 2.8. மில்லியனையும் திருமதி பிரியந்தக்குமாரவுக்கு வழங்கியுள்ளனர்.
பிரியந்த கடமையாற்றிய பாக்கிஸ்தான் ரஜக்கோ கம்பனி ஒவ்வொரு மாதமும் பிரியந்தவின் சம்பளத்தினை அனுப்பிவைக்க தீர்மாணித்துள்ளதாகவும் உயா்ஸ்தானிகா் அங்கு கூறினாா்.
இங்கு உரையாற்றிய திருமதி பிரியந்த குமார எனது கணவரின் மரணத்திற்கு சம்பந்தப்பட்டவா்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தல் வேண்டும். பாக்கிஸ்தான் பிரதமா் மற்றும் அதிகாரிகளுக்கும் எனக்கு உதவிய சகல பாக்கிஸ்தான் வா்த்தக சமூகத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் மேலும் .இலங்கையின் ஜனாதிபதி பிரதமா் ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்தாா். எனது குழந்தைகளுக்கும் பௌத்த மதம் கூறியது போன்று எனது கணவரை கொலைசெய்தவா்களுககும் சிறந்த கண்னியம் அகிம்சை அவர்களது உள்ளத்தில் “உருவாக வேண்டும். சகல மனித குலத்திற்கும் அவா்கள் அன்பு காட்டுதல் வேண்டும் எனவும் திருமதி பிரியங்க குமார உரையாற்றினாா்
0 comments :
Post a Comment