திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியில் திசைமுகப்படுத்தல் செயலமர்வு



றம்ஸீன் முஹம்மட்-
திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியின் 2022/ 2023 ஆம் கல்வியாண்டுக்கான உயர் தரத்திற்கு உள்ளீர்க்கப்பட்ட புதிய மாணவர்களுக்கு கல்லூரியின் கலை மற்றும் வர்த்தக பிரிவின் ஏற்பாட்டில் இரண்டு நாள் திசைமுகப்படுத்தல் செயலமர்வு அண்மையில் கல்லூரியின் கணிதபாட அறையில் நடைபெற்றது,

இரண்டாம் நாள் நிகழ்வு அதிபர் கே.றஸிம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது . இச்செயலமர்வில் இக்கல்லூரியின் பழைய மாணவரும் ,கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளருமான,சட்ட மாணி ஜனாப் எம்.எம்.ஜவாத் சிறப்பு வளவாளராக கலந்துகொண்டார்.மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம்.முனவ்வரா நளிம் , வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.. சியாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் கல்லூரி பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , பாட இணைப்பாளர்கள் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு வளவாளராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர், சட்ட மாணி எம்.எம்.ஜவாத் ,21ம் நூற்றாண்டில் சிறந்த மாணவரின் இயல்புகளும் , வகிபாகமும், ஒரு மாணவர் உயர் கல்வியினை கற்பதன் ஊடாக அரசு மற்றும் சமூகம் எதிபார்க்கும் இலக்குகளும், உயர் கல்வியின் பின்னராக சமூகத்தின் சிறந்த பிரஜையாக செயற்படுவதற்கு மாணவர் பருவத்தை எவ்வாறு பயனுறுதி வாய்ந்ததாக மாற்றலாம், கற்றலுக்கான ஊக்கப்படுத்தல், சிறந்த மாணவர்களிடம் காணப்பட வேண்டிய பண்புகள்,என்ற அடிப்படையில் முன் வைப்புக்களை நிகழ்தினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :