மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அந்தவகையில், வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியதில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைக் கருத்திற் கொண்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.இம்தியாஸ் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இதன்போது, நீர் வடிந்தோடாமல் காணப்பட்ட வடிகான்கள் மற்றும் வீதிகள் போன்றவைகளை ஜெ.சி.பி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய பிரதேச சபை உறுப்பினர் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment