திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மண்டானைப் பகுதியில் கடந்த 2022/01/01ஆம் திகதி முதலை தாக்குதலுக்கு இலக்காகி மரணம் அடைந்த திருக்கோவில்04 குடிநிலத்தைச் சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்த்தி என்பவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது.
ஆரம்ப கட்ட மரணச் செலவு தொகையை பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் வழிகாட்டலில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விலங்கு தாக்குதல் நஷ்டஈடு கொடுப்பனவினை அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவையாளர்நிருவாக உத்தியோத்தர் மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வானது நேற்று முன்தினம் 2022/01/10 திருக்கோவில் 04 பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக கிராமசேவையாளர்நிருவாக உத்தியோத்தர் எஸ்.கந்தசாமி,அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் த.தனராஜன் பகுதி கிராம உத்தியோகத்தரம் சு.பார்த்தீபன்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.முரளி ஆகியோர் இணைந்து இவ் அனர்த்த நிவாரண நஷ்டஈடு நிதியினை வழங்கி வைத்தனர்
0 comments :
Post a Comment