வெள்ள அனர்த்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆலங்குடா பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொதி



அஸ்ஹர் இப்றாஹிம்-
ண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்ததினால் கடுமையாகபாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆலங்குடா பிரதேச மக்களுக்கு தலா 11000/= ரூபாய் பெறுமதியான 300 அத்தியவசியபொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின்பேரில் தனியார் தொண்டர் நிறுவனத்தின் அனுசரணையில் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மட் ரியாஸ், தனியார் தொண்டர் நிறுவனத்தின் பணிப்பாளர் எம். மிஹ்லார் உள்ளிட்ட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :