கல்முனை வின்னர்ஸ் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் : மூன்று பிரிவுகளில் சம்பியன்கள் தெரிவானர்.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் புத்தாண்டு தினமான சனிக்கிழமை (01) இரவு கல்முனை வின்னர்ஸ் இந் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான ஆசிரியர் யூ.எல்.எம். ஹிலாலின் தலைமையில் வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.

15 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு மேற்பட்டோர் என மூன்று வயது ஜோடிக்குழுவினருக்கு இடையில் நடைபெற்ற இந்த பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 15 வயதிற்கு உட்பட்டோர் வகுப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 18 ஜோடிகள் மோதியதில் மூன்றாம் இடத்தை ஆதில்- றபீஸ் ஜோடியும், இரண்டாம் இடத்தை ஷராஃப் - அன்சாப் ஜோடியும் பெற்றுக்கொண்டதுடன் அந்த வகுப்பு பிரிவின் சம்பியன் பட்டத்தை அஹனாப் - மிஜ்வத் ஜோடி தட்டிச்சென்றது. 17 வயதிற்கு உட்பட்டோர் வகுப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 12 ஜோடிகள் மோதியதில் இரண்டாம் இடத்தை டீ.யுகேசன் - கே.விபிஷன் ஜோடி பெற்றுக்கொண்டதுடன் அந்த வகுப்பு பிரிவின் சம்பியன் பட்டத்தை ஸஹ்ஸத் - அப்தி ஜோடி தட்டிச்சென்றது. மேலும் 17 வயதிற்கு மேற்பட்டோர் வகுப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 11 ஜோடிகள் மோதியதில் இரண்டாம் இடத்தை இம்ஸான் - சஸ்பி ஜோடி பெற்றுக்கொண்டதுடன் அந்த வகுப்பு பிரிவின் சம்பியன் பட்டத்தை ஆதில் - நிப்ராஸ் ஜோடி தட்டிச்சென்றது.

இந்த இறுதிநாள் நிகழ்விலும், பரிசளிப்பு வைபகத்திலும் விளையாட்டுத்துறை முன்னாள் பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் கௌரவ அதிதியாக கலந்துகொண்டதுடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஷன் அக்தர், கல்முனை முன்னாள் பிரதேச செயலாளர் ஏ. எம். நஸீர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.பி.எம். இர்ஷாத், ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர், அல்- பஹ்ரியா தேசிய பாடசாலை, அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர், அல்- அஸ்ஹர் வித்தியாலய அதிபர் உட்பட சாய்ந்தமருது கிரிக்கட் சங்க பிரதிநிதிகள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸினால் இந்த கல்முனை வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு நிலையத்தின் மேம்பாட்டுக்கான நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :