இளைஞர்களுக்கான தலைமைத்துவ மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான செயலமர்வொன்று நேற்று 29.01.2022 AHRC அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இளைஞர்களுக்கு தலைமைத்துவம், நல்லிணக்கம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய பயிற்சி செயலமர்வானது
AHRC நிறுவனத்தின் இளைஞர் வலுவூட்டலும், நல்லிணக்கமும் எனும் செயற்பாட்டின் கீழ் 02 ம் கட்டமாக இது இளைஞர்களுக்கு நடாத்தப்பட்டது இதன் 1ம் கட்ட செயலமர்வு கடந்த 21 ம் திகதி கந்தளாய் பிரதேசத்தில் சிங்கள மொழி மூலம் இளைஞர்களுக்கு நடாத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வு தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சிராஜ் நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் .சாதிக்கீனின் வேண்டுகோளிற்கிணங்க நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் .இஸ்ஸடீன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
மற்றும் இப் பயிற்சி பட்டறையில் AHRC யின் பிரதி இணைப்பாளர் அ.மதன் தலைமைதாங்கியதுடன் திட்ட முகாமையாளர் செல்வி. எஸ். சுதர்சினி மற்றும் திட்ட இணைப்பாளர்கள் பி.ஜெகதீஸ் மற்றும் டி.கிரிசாந் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment