மாற்று மோதிரம் திருமணக் கண்காட்சி (படங்கள்)



அஷ்ரப் ஏ சமத்-
வ்வொரு வருடமும் அருந்ததி எனும் நிறுவனத்தினால் ”மாற்று மோதிரம் ”எனும் திருமண கண்காட்சியினை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடாத்திவருகின்றது. . கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மிகவும் நம்பகரமான முறையில் திருமண சேவையை ஆரம்பித்த இந் நிவனம் .2016, 2018 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கண்காட்சியினை நடாத்திவந்தது.

இம்முறை தலைநகரில் 10.01.2022 திகதி மிக கோலாகலமாக நாட்டில் இத்துறை சாா்ந்த 60க்கும் மேற்பட்ட திருமண அழகுக்கலைஞா்களையும் , திருமன சேவை வழங்குனா்களின் வடிவலங்கார காட்சிப்படுத்தல்கள் நிகழ்வுகள் மிகவும் செம்மையான பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இவ் நிறுவனத்தின் பணிப்பாளா் மேணகா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதமரின் பாரியாா் சிரந்தி ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இத்துறையில் திறமைகளை வெளிப்படுத்திய வடிவலங்கார நிறுவனா்களின் திருமன வடிவலங்கார கலைஞா்களுக்கு விருதுகளையும் வழங்கி வைத்தாா். இந் நிறுவனத்தின் திருமண பருவ இதழான அருந்ததி வெளியீட்டு வைக்கப்பட்டது. திருமணங்கள் சம்பந்தமான பாடல்கள் அடங்கிய இறுவெட்டு ஒன்றும் வெளியிடப்பட்டது.,மேலும் இந் நிகழ்வுகளுக்கு அனுசரனை வழங்கிய அனுசரனையாளா்களுக்கும் பிரதம அதிதியால் விருதுகள் வழங்கி வைக்க்ப்பட்டன.
வட மாகாண முன்னாள் ஆளுனா் ரெஜிநோல்ட் குரே, முன்னாள் அமைச்சா் வஜிர அபேவர்த்தன, தெஹிவளை கல்கிகை மாநகர சபை உறுப்பிணா் முஸ்தபா சரினா, தினகரன் பிரதம ஆசிரியா் செந்தில்வேலவா், பிரமுகா்கள் ஏற்பாட்டாளா் மனோகரன், மற்றும் அதிதிகளும் கலந்து சிறப்பித்தனா்

கொழுமபு , கண்டி, மாத்தளை, திருகோணமலை, கல்முனை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலிருந்து திருமண வடிவங்கள் மேடையில் காட்சிப்படுத்தப்பட்டன. அருந்ததி திருமண சேவை பெற முகநுால் அருந்ததி www.arunthathee.com, facebook Arunthathee, /0777164524 whatsup தொடா்பு கொள்ளமுடியும்.





















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :