அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு



சென்னை : அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் இதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் இடம் பெற்று இந்தக் கூட்டமைப்பு அனைத்து மாநிலங்களுக்கும், நீதிக்கான சமூக பரிந்துரைகளை வழங்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது
ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, மக்களாட்சியின் கருத்தாக்கங்களை ஒவ்வொன்றாக சிதைத்து வருகிறது. நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, அணைகள் பாதுகாப்புச்சட்டம், மாநிலங்களின் நிதி மூலாதாரங்களை சிதைப்பது மற்றும் ஆளுநரை கொண்டு மாநில அரசுகளை கட்டுப்படுத்துவது, மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்தது என நாட்டின் மக்களாட்சித் தத்துவங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசு. அரசியலமைப்பு வழங்கிய சமூக நீதி உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்புகளில் அனைத்து சமூக மக்களுக்கும் இட ஓதுக்கீடு கிடைக்க அரசியலமைப்பு உறுதியளித்துள்ளது. இதனை சீர்குலைக்கும் வேலைகளிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகின்றது.

சமுகநீதிக்கு முக்கிய சான்றாக விளங்கிய மண்டல் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட பின்னர், வி.பி.சிங் தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் மண்டல் குழுவின் அறிக்கைகள் ஏற்கப்படுவதாக அறிவித்தது. மண்டல் குழுவின் அறிக்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு எதிராக வட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன, எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் தமிழகத்தில் சமூகநீதி இயக்கங்கள் மண்டல் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு பக்கபலமாக இருந்தன. சமூகநீதியை நிலைநாட்டுவதில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவு தமிழ்நாடு மட்டுமே முன்னின்று வருகின்றது.

மறைந்த கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு இக்கட்டான நிலைகளில் மாநில உரிமைகளை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பல்வேறு மாநில முதல்வர்களுடன் இணைந்து சமூகநீதி அரசியலை முன்னெடுத்தனர். இந்நிலையில் தற்போது மக்களாட்சியை சிதைத்து வரும், பாஜகவின் மதவெறி அரசியலை வீழ்த்த அகில இந்திய அளவில் ஓர் வலுவான சமூக நீதிக்கான போராட்டம் அவசியப்படுகின்ற நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்வைத்துள்ள இக்கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே, சமூக நீதிக்காக மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்வதோடு, இந்த சமூகநீதி கூட்டமைப்பை விரைந்து ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :