அம்பாறை மாவட்டத்தில் முன்னணிக் கழகமான சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகம் புதிய அணித்தலைவருடன் தமது உத்தியோகபூர்வ முதாலவது போட்டியினை மட்டக்களப்பு மாவட்ட பூநொச்சிமுனை விளையாட்டு கழகத்துடன் இடம்பெற்ற சினேக பூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் மியன்டாட் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிக்கொண்டது.
இப்போட்டியானது பூநொச்சிமுனை இக்ரா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கடந்த (21)வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
20 ஓவர்கள் கொண்ட இப் போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பாடிய பூநொச்சிமுனை விளையாட்டுக்கழகம் 04 விக்கெட்டுகளையும் இழந்து 184 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது டன் இதன் போது தனது அணிக்காக அதி கூடிய ஒட்டத்தினை 50 சஜி பெற்றுக்கொடுத்தார் .
பதிலுக்கு துடுப்பாடிய சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகம் வீரர்களின் அதித சிறப்பாட்டம் மூலம் 17 வது ஓவர் 2 வது பந்தில் நிர்ணயிக்கப்பட்ட 185 ஓட்டங்களைப் பெற்று 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது .
மியன்டாட் கழகத்தின் ஆரம்ப வீரரான ஏ. எம். பயாஸ் மிகவும் அபாராமாக துடுப்பாடுத்தாடி 47 பந்துகளுக்கு 87 ஒட்டங் களை பெற்றுக் கொடுத்து அணியின் அணியின் வெற்றிக்கு வழியமைத்து போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.
0 comments :
Post a Comment