சாய்ந்தமருதுவின் முதிசங்களில் ஒன்று விடைபெற்றது!



சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு தற்காலம் கல்கிசை 11/07 சென்மேரிஸ் வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் வசித்த பிரபல கல்விமான் மும்மொழி அறிவாற்றல் கொண்டவர்; சம்மாந்துறை, தெஹிவளை மற்றும் மருதானை தொழில் நுட்பக் கல்லூரிகளில் முன்னாள் அதிபராகவும்,பேருவளை இக்ரா தொழில் நுட்ப கல்லூரியின் முன்னாள் அதிபராகவும், பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்..அஸ்ரப் அவர்களின் அழைப்பை ஏற்று கப்பல்துறை புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் தொழில்நுட்ப ஆலோசகராக கடமையாற்றிய எம்.எச்.ஏ.சமட் அவர்கள் 30.01.2022 இல் இவ்வுலகை விட்டு விடைபெற்றார்.

இவரது மறுமை வாழ்வு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்க பூங்காவில் அமைய இறைவனிடம் பிராத்திப்போம்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் 31.01.2022 திங்கட்கிழமை ளுஹர் தொழுகையின் பின்னர் களுபோவிலை பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும். உற்றார் உறவினர்கள் இதை ஏற்றுக் கொள்ளவும்.

இவர் அனஸ் சமட், (அவுஸ்ரேலியா) அஸ்ஹர் சமட், முன்னாள் ஆசிரியர், அனோ ஜா சமட், (டுபாய்) அனீஜா சமட், அஸ்ரப் சமட் ( ஊடகவியலாளர், வீடமைப்பு அதிகார சபை) அஹ்ரம் சமட் (அபுதாபி) அனீஸ் சமட் ஆகியோரின் அன்பு தகப்பனும், ஹபீல் நிஸார், சானஸ், றிஹானா,றஸீமா, பைறோஸா ஆகியோரின் மாமினாரும், மர்ஹூம் மஜீட், ஒய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் முஸ்தபா,உதுமாலெவ்வை (இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை),ஆகியோரின் சகலனும் , மர்ஹும் முனாப் அதிபர்,சம்மாந்துறை,உதுமாலெப்பை ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்,ஹமீட் அட்டாளைச்சேனை, ஆகியோரின் மச்சானும் ஆவார்.

தகவல்: சகலன் எம்.எம். உதுமாலெவ்வை

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :