கர்நாடகாவில் ஹிஜாப் ( முக்காடு) அணிந்த மாணவிகள் இடைநீக்கம் ! நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம் !!



பி.எஸ்.ஐ.கனி-
ர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஹிஜாப் (முக்காடு ) அணிந்ததற்காக மாணவிகள் கல்லூரி வகுப்பறைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதற்கு தேசிய பெண்கள் அமைப்பான நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தமிழக பொதுச்செயலாளர் சர்மிளாபானு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கு சுதந்திரத்துடன் அறிவைத் தேடவும், தங்கள் விருப்பப்படி மதத்தை கடைப்பிடிக்கவும் உரிமை உண்டு . இது அவர்களது அடிப்படை உரிமை . கர்நாடகாவில் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு, அவர்களது மத ரீதியான உடையை அணிவதில் பாகுபாடு காட்டப்பட்டது வன்மையாக கண்டிக்கதக்கது . இது சட்டப்படி அரசியல் சாசன பிரிவு 14 , 15 , 17 & 25 ஆகியவற்றிற்கு எதிரானது .

துரதிருஷ்டவசமாக , கல்வி நிறுவனங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையே பிரச்சினைகளைத் தூண்டி மாணவர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது . ஒரு கல்வி நிறுவனம் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் . மதச்சார்பற்ற மனப்பான்மை கொண்ட பிள்ளைகளை வளர்க்க வேண்டும் . அவர்கள்தான் உண்மையில் நம் நாட்டின் எதிர்காலம் .
ஆகவே மாணவிகளின் உடை விவகாரத்தில் பாகுபாட்டுடன் நடந்து கொண்ட அக்கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும், மேலும் இப்பிரச்சினையின் போது இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவிகளை மீண்டும் வகுப்பிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :