ஆளுமைகள் நிறைந்த, கலீபத்துல் குலபா அப்துல் ஹமீதின் வாழ்வு முன்மாதிரிமிக்கது.முஸ்லிம் கவுன்ஸில் அனுதாபம்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஸ்லாமிய ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபாவும் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவருமான மௌலவி ஜே. அப்துல் ஹமீத் அவர்களது மறைவு குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் அதன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறிலங்காவின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மர்ஹும் சாஹுல் ஹமீத் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபாவாகப் பணிபுரிந்து, அந்த அமைப்புக்கு முன்மாதிரியான தலைமைத்துவம் வழங்கினார்.
சமூகத்தின் ஐக்கியத்தில் தீவிர அக்கறை காட்டிய இவர், சிறந்த பேச்சாளருமாவார். ஆளுமைகள் நிறைந்த இவரது வாழ்வு முன்மாதிரிமிக்கது. எல்லா அமைப்புகளையும் மதித்து தன் பணிகளை இவர் முன்னெடுத்திருந்தார்.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அவரது மறுமை வாழ்வு சிறப்பாக அமைவதற்குப் பிரார்த்திப்பதோடு, இவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு பொறுமையை அளிக்குமாறும் பிராத்திக்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :