கடலுக்குச் சென்ற தந்தையும், மகனும் காணாமல் போயுள்ள சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடல் பகுதியில் வைத்தே இருவரும் காணாமல் போயுள்ளனர்.
வழமையாக இயந்திரப் படகில் சென்று மீன்பிடித்து வரும் தந்தையும் மகனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இவ்வாறு கடலுக்குச் சென்று வீடு திருப்பாத இருவரையும் தேட ஆரம்பித்த ஏனைய மீனவர்கள், அவர்கள் இருவரும் சென்ற இயந்திரப் படகையும், மீன்பிடிக்க கடலில் வைக்கப்பட்ட வலையையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போன இருவரும் காயங்கேணி சுனாமி வீட்டுத்திட்ட பகுதியை சேர்ந்த 55 மற்றும் 18 ஆகிய வயதுகளுடைய தந்தையும், மகனும் என்று தெரியவந்துள்ளது.
வாகரை பொலிஸாரின் உதவியுடன் காணாமல் போன இரு மீனவர்களையும் தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment