அரசினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் மாற்றியமைக்கப்பட்ட சம்பள அதிகரிப்புத் தொகையினை சம்மாந்துறை வலய அதிபர் ஆசிரியர் இம்மாத சம்பளத்துடன் பெற்றுள்ளனர்.
குறித்த சம்பளஉயர்ச்சியை முதல் மாதத்திலேயே உடன் வழங்குவதற்கு கரிசனையோடு உரிய பணிப்புகளை வழங்கிய வலய கல்விப் பணிப்பாளர் நஜீம், துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட கணக்காளர் சீ.திருப்பிரகாசம் ,நிருவாகஉத்தியோகத்தர் முஷர்ரப் மற்றும் நிருவாக, நிதி, நிருவாக உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை வலய அதிபர் ,ஆசிரியர்கள் தெரிவித்துவருகின்றனர்.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் 2022/01/05 ஆம் திகதிய 03/2016 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரமும் ,கல்வி அமைச்சின் 2022/01/06 ஆம் இலக்க 02/2022 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரமும், அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள மாற்றத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்து (2022.01.20) ஜனவரி மாத வேதனத்துடன் சம்பள உயர்ச்சிகள் வைப்பிலிடப்பட்டுள்ளது.
மேலும் ,குறித்த கடமைகளுக்காக தமது உயரிய பங்களிப்பினை வழங்கியிருந்த கல்விப் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர் ,நிர்வாகக் கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் கணக்காளர், கணக்கு கிளை உத்தியோகத்தர்கள் போன்ற அனைவரதும் அயராத சேவையினை இத்தால் நினைவு கூர்கின்றேன் என்று வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசஊழியர்களுக்கான 5000 ருபா விசேட கொடுப்பனவு கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் பிரதம கண்க்காளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் விசேட சம்பளபட்டியல் மூலம் செலுத்தப்படவுள்ளது.
அதிபர் ஆசிரியர் சேவையினைச்சேர்ந்த ஆசிரியஆலோசகர்கள் உதவிக்கல்விப்பணிப்பாளர்களும் இவ்வதிகரிப்பை இம்மாத சம்பளத்துடன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
0 comments :
Post a Comment