இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படவுள்ள, மாகாண மட்டத்திலான 28 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்டப் போட்டித்தொடருக்கான கிழக்கு மாகாண அணிக்கான வீரர்கள் தெரிவின் இறுதி 25பேர் கொண்ட கிழக்கு மாகாண அணியில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கிலிருந்து பல வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணி வீரர்களான
எம்.எம்.பஜீஸ்ஹான், எம்.ஏ.ஹாஜர் ஹனான் ஆகிய இரண்டு வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் என மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் செயலாளரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உடற்கல்வி பொறுப்பாளருமான
எம்.எல்.ஏ.தாஹிர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment